Arakkonam Online - Arakkonam Properties - Land Sales
  • Home
  • Services
    • New Globus Consultancy Services
    • Real Estate
  • Agriculture
  • About Arakkonam
    • Thought for the day
    • Important Contacts >
      • Banks & ATM's
    • Villages in Arakkonam Taluk
    • Public Service officials
    • Transport
    • Hotels
    • Contact Us
    • Suggestion Box
  • Temples
    • Thakkolam
    • Kanchipuram
    • Thiruvalangadu
    • agaram
    • Thiruthani
    • Sholinghur
    • Golden Temple Vellore
  • Arakkonam - Free Service

APRIL 6TH இயற்கை வேளாண்மை தினம் NATURAL FARMING DAY

4/10/2014

0 Comments

 
APRIL 6TH இயற்கை வேளாண்மை தினம் NATURAL FARMING DAY


இயற்கைக் காக்க தனது இன்னுயிர் அளித்த  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எல்லோர் நன்மைக்காக உலகில் உதித்த தினம் ஏப்ரல் 6. இனி மேல் ஏப்ரல் 6 தேதி இயற்கை வேளாண்மை தினம் என்று போற்றுவோம்.

To Save the nature & farming - he laid down his life. April 6th is the day he was born to work for the welfare of all. From Today Let us call APRIL 6TH as NATURAL FARMING DAY.

"நச்சில்லா உணவு " பூச்சிக் கொல்லிகள் மற்றும்  ரசாயன உரத்தால் "பசுமை புரட்சி " என்ற  பெயரால் நாடெங்கும் விளைவிக்கும் பயிர்களெல்லாம் விஷம் கலந்தது, மக்களுக்கு வித விதமான நோய்கள்  வந்தவண்ணம் உள்ளது. முக்கியமாக புற்றுநோய் பலருக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த  சூழ்நிலை மாற தான்  பார்த்த  அரசாங்க வேலையை (விவசாயத்துறை அதிகாரி)உதறிவிட்டு 40ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இடைவிடாது பாடுபட்டார் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் ஐயா அவர்கள்.

In the name of "Green Revolution" Government Introduced pesticides & inorganic Chemical manure from 1960s to give us poison filled food. These chemicals gave people lot of diseases & Cancer is peaking up. To overcome this adverse situation, Organic Farming Scientist Dr. Nammazhwar ( Many write it as "Nammalvar" which I don't prescribe - one it is wrongly spelt for Tamizh equivalent & other it was a war Nammazhwar was fighting) even left his job in the Government Agricultural Department to fight a long battle for last 40 odd years. 

நம்மாழ்வார் வெறும் விவசாயத்திற்காக மட்டும்  போராடவில்லை நாம் பண்டைய தமிழ் நாகரிகத்தின் படி  இயற்கையோடு ஒத்து வாழவேண்டும் என்பதற்காக அது குறித்து  விழிப்புணர்ச்சி கொண்டு  வர  தன் வாழ்க்கையை அர்பணித்துள்ளார். சமீப காலங்களில் மும்முனை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் விவசாயத்தை மீட்பது மூலம் நமது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு  போராடினார்.

Nammazhwar didn't fight just for farming, he fought for bringing back highly civilized culture of Tamizhs on living in synchronized with Nature. To bring the awareness he has laid down his life. in the recent days Farming has been attacked by three violent weapons, by saving farming he has seeded for the safe future of all of us.


விவசாயத்தின் மூன்று எதிரிகள் Farming's three main enemies

1. பூச்சிக்கொல்லி -ரசாயன உரம் pesticides & Inorganic fertilizers

2. விவசாயநிலத்தை வீட்டு மனை ஆக்குதல் Farm land getting converted to real estate

3. கரியமிலபடுகை எடுப்பு திட்டம் Methane Gas Fracking from Farm Lands.

நம்மாழ்வார் அய்யாவின் வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டி.

Dr. Nammazhwar's life is a guide for all of us. Let us carry that forward.

நம்மாழ்வார் ஒவ்வொரு உயிரினத்தையும் மிகவும் நேசித்தார். அவர் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நிரந்திர வேளாண்மையே எல்லா நிலங்களிலும் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். 

Nammazhwar loved all creatures. he prescribed Integrated farming where all forms of living things shall co-exist. We will continue his work to attain the goal.

இந்த வருடத்திய வெயில்  காலம் மிகவும் கடுமையாக  உள்ளது. ஒவ்வொருவரும் சக  உயிர்களுக்காக சிறிது தண்ணீர் வைப்போம்.

This year Summer is really hot. Let us keep some water for all our fellow living things.

 நம்மாழ்வார் நினைவில் தண்ணீர் பந்தல் - தெருவில் இருக்கும் உயிர்களுக்காக, மொட்டைமாடியில் பறவைகளுக்காக, மனிதர்களுக்காக பானையிலும் வைக்கப்பட்டுள்ளது.

In the Name of Nammazhwar RESPONSIBLE CITIZEN have started keeping water for all street animals, Birds (at Terrace) & for Human Beings in Pot.

பொறுப்புள்ள குடிமக்களின்  ஒரு சிறு  முயற்சி. A small initiative from RESPONSIBLE CITIZEN

பொறுப்புள்ள குடிமக்கள், தலைமையகம், வேளச்சேரி, சென்னை 
0 Comments



Leave a Reply.

    Author

    Hi all!
    Just I found some articles from my friends mails which is worth to share in this Blog!

    Archives

    November 2014
    July 2014
    May 2014
    April 2014
    December 2012
    October 2012
    September 2012
    June 2012
    May 2012
    April 2012
    March 2012
    February 2012

    RSS Feed

    Categories

    All
    General
    Health
    Parenting
    Self Development

Powered by Create your own unique website with customizable templates.